கொரோனா பரிசோதனையில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் ஆய்வாளர்கள்..!! பெரும் எதிர்பார்ப்பில் உலக நாடுகள்..!

கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர். இந்தப் பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.

இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால், அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.