2.4 கோடி ரூபாவிற்கு விலைபோன மொபைல் நம்பர்..!! வினோத ரூபத்தில் வந்த பேரதிர்ஷ்டம்!

சீனாவில் அதிர்ஷ்டமாக கருதப்படும் மொபைல் எண் ரூ.2.4 கோடிக்கு மேல் விலைபோனது.அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது ஒரு மொபைல் நம்பர். சீனாவில் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படும் மொபைல் நம்பர் 2.25 மில்லியன் யுவானுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2.4 கோடி) விற்பனையாகியுள்ளது.இந்த மொபைல் எண்ணில் கடைசி ஐந்து இலக்கம் ‘88888’ என முடிவடைகிறது. சீன மொழியில் ‘எட்டு’ வார்த்தைக்கு செழிப்பு என அர்த்தமாம். எனவே, இந்த மொபைல் நம்பரை வாங்க ஏராளமானோர் போட்டி போட்டனர்.

இதையடுத்து இந்த மொபைல் எண்ணை உடனடியாக அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை ஏலத்திற்கு விடும்படி பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது.இதில், அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படும் மொபைல் நம்பருக்கு 5000க்கும் மேற்பட்டோர் விலை கேட்டனர். இந்நிலையில், அந்த மொபைல் நம்பர் 2.25 மில்லியன் யுவானுக்கு (ரூ.2.4 கோடி) விலைபோனது. வெற்றி பெற்ற நபர் ஏற்கெனவே 400 யுவான் செலுத்திவிட்டார்.மீதத் தொகையை செலுத்த 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏலத்தில் எட்டு ஏழுகள் (77777777) கொண்ட மொபைல் எண் 3.91 மில்லியன் யுவானுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.சீன மொழியில் ‘ஏழு’ என்றால் எழுச்சி என்று அர்த்தமாம். எனவே, இந்த எண் உறவுகளுக்கு உகந்தது என அவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனது.சீன மொழியில் துரதிர்ஷ்ட எண்ணாக ‘நான்கு’ கருதப்படுகிறது. நான்கு என்றால் மரணம் என்று அர்த்தமாம். இப்படி, நம்பர்களுக்கே ஒரு தனி மார்க்கெட்டை சீனர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.