இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 07 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இவர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பிய 05 பேரும் ஓமானில் இருந்து வருகைதந்த இருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேநேரம், இந்த வைரஸ் தொற்றில் இருந்து இன்று மேலும் 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 213 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதேநேரம் இந்த வைரஸ் தொற்று சந்தேகத்தில் 55 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.