இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு..!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையானது 199 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் தற்போது வைத்தியசாலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட 138 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் நடுமுழுவதிலும் உள்ள வைரத்தியசாலைகளில் 165 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.