புதிய நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் 5000 ரூபா நாணயத்தாள்..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நேற்றைய தினம் நிதி அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், அதனை குறிக்கும் வகையில் புதிய நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் 5000 ரூபா நாணயத்தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மதகுருக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஒரு புதிய நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் பிரதமரிடம் புதிய நாணயத்தாளினை வழங்கி வைத்தார்.இதேவேளை, செப்டம்பர் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் ஒரு லட்சத்து 50ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மதிப்பாய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.