நல்லுார் ஆலய தீர்த்த உற்சபத்தில் வயோதிபப் பெண்ணின் சங்கலியை அறுத்த கணவனும் மனைவியும் அதிரடியாகக் கைது..!!

நல்லுார் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சபத்தில் வயோதிபப் பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த கணவனும், மனைவியும் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் இறுதி நாளான தீர்த்த திருவிழா இன்று நடைபெற்றது. இதன்போது பக்தர்கள் மீது தீர்த்த நீர் பாய்ச்சப்பட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்தி வயோதிப பெண்ணின் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றபோது கையும் களவுமாக அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார்
கணவன், மனைவியை கைது செய்தனர். குறித்த இருவரும் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் உற்சபகாலத்தில் கோவில்களில் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.