நாடு முழுவதிலும் மின் துண்டிப்பு..சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய இலங்கை..!!

இலங்கையில் நேற்றைய தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்கு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

மதியம் 12.30 மணியளவில் முழு நாட்டிற்கும் மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் முயற்சிகளுக்கு 7 முதல் 8 மணிநேரம் எடுத்தன.மின் துண்டிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நீர் வழங்கல் மற்றும் இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட மின் தடை குறித்து சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் தலைப்பு செய்திகளாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.