தாக்குதலொன்றின் சந்தேக நபர்களை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது யாழில் கொடூரத் தாக்குதல்..இரு பொலிஸார் படுகாயம்..!

யாழ்.ஊரெழுப் பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரை கைது செய்வதற்காக சென்றிருந்த பொலிஸார் மீது காடையர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊரெழு போயிட்டி பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு பொலிசார் சென்றுள்ளனர்.

அப்பகுதிக்கு சென்று குறித்த நபரை தேடி திரிந்த போது அங்கு இரு தரப்புக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பில் விசாரிக்க சென்ற பொலிசார் மீது அங்கு நின்ற காடையர் குழுபொலிசார் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இதனால் இரு பொலிசார் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.