புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நாளை..!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
_17833″ align=”alignnone” width=”1024″] S
அமைச்சரவை கூட்டமானது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்களுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளைக் கழுவுதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த 12ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.இதில் 26 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இம்முறை அமைச்சரவை கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு இராஜாங்க அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் ஒருவர் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யும் போது அவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.