தாயால் கைவிடப்பட்ட 15 வயது சிறுமி இரு மாத கர்ப்பிணியாக!! 27 வயது இளைஞரால் சீரழிக்கப்பட்ட கொடூரம்..!!

மஸ்கெலிய – சிறிய சூரியகந்தை தோட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சிறுமி தற்பொழுது இரண்டு மாதக் கர்பிணியாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியின் தாய் சிறுமியை கைவிட்டுச்சென்றுள்ளமையில் சிறுமி பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக சிறுமியுடன் குறித்த தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியின் நிலை தொடர்பில் அவரின் பாட்டி காவல் நிலையத்தில் அறிவித்தமையை தொடர்ந்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.