இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து…பாட்டுக் கேட்டுக் கொண்டே ரயிலுடன் காரைமோதிய சாரதி..!!

பொல்கஹாவெல, புஹூரிய புகையிரத கடவையில், புகையிரதத்துடன் மோதிய காரொன்று பலத்த சேதமடைந்துள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன், கார் மோதியது. இந்த விபத்தில் கார் சாரதி பலத்த காயமடைந்து பொல்கஹாவெல மருத்துவமனைக்கு பிரதேசவாசிகளால் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காயமடைந்த சாரதி அந்த பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர், காருக்குள் பலத்த சத்தமான பாடலை ஒலிக்கவிட்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.பொல்கஹாவெல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.