அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு..!! திங்கள் முதல் பணிக்குத் திரும்ப அழைப்பு..!!

இலங்கையில் உள்ள சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் பணிக்கு திரும்பவேண்டும் என மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மானியங்கள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது கல்வி சாரா ஊரியர்கள் விடயமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி தீர்மானமும் எட்டப்பட்டது. இந்த தீர்மானத்தில் கொரோனா தாக்கத்தின் பின்பு பல பல்கலைக் கழகங்களில் கல்வி சாரா ஊழியர்கள்

முழுமையாக பணிக்கு திரும்பாத நிலமை கானப்படுகின்றது. இதற்கு ஆணைக்குழுவின் சுற்று நிரூபம் கிடைக்கவில்லை என கூறப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றினை ஆராய்ந்த குழு உடனடியாக குறித்த சுற்று நிரூபத்தை அனுப்புவதாக தீர்மானித்துள்ளது.ஆணைக் குழுவின் தீர்மானத்தின் பிரதிகள் திங்கட் கிழமைசகல பல்கலைக் கழகங்களிற்கும் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.