கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. எனினும் கொவிட் 19 வைரஸ் பரவாத வகையில் திட்டத்தை முன்னெடுப்பது முதற்கட்ட தேவையாகும்.அத்துடன் தொற்று நோய் மற்றும் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.மக்களுக்கு நோயற்ற வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கமாகும். அது தொடர்பில் அரசாங்கம் விரிவான கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.