அரசாங்கத்தில் இணைய தயாராகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர் ஊடாக குறித்த கூட்டமைப்பு உறுப்பினர் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எனினும், அரசாங்கம் அதற்கு எவ்வித சாதகமான பதிலும் வழங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அந்த கட்சியின் உள்ளக மோதல் காரணமாக ஒரு தொகுதி உறுப்பினர்கள் வருத்தத்தில் உள்ளார்கள் எனவும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.