முள்ளிவாய்க்காலில் இருந்து பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்துள்ள சி வி விக்னேஸ்வரன்..!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி வி விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை சென்ற விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தனது சத்தியபிரமாணம் உரையை நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.