பெங்களுரில் வெடித்த வன்முறை…இந்துக் கோவிலைப் பாதுகாக்க மனித சங்கிலியாக மாறிய இஸ்லாமியர்கள்..!!

கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருந்து இந்துக் கோயிலைக் காக்க இஸ்லாமிய இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து நின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் நவின், முகமது நபியை இழிவுபடுத்தி முகநூலில் அவதூறாக கருத்துப் பதிவிட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரின் இல்லைத்தை முற்றுகையிட்டனர்.இந்த முற்றுகைப் போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. பொலிசார் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.வன்முறை கட்டுக்குள் வராத நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற போது பெங்களூரு நகரின் கிழக்குப் பகுதியில் பைராசந்திராவில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு இந்து கோயிலுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்கள் குழு ஒன்று ஒற்றுமையுடன் செயல்பட்டு மனித சங்கிலியாக நின்றது. பைராசந்திராவில் நடந்த இந்த சம்பவத்தின் காணொலிகள் இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.