முதல் பயணமே இறுதிப் பயணமாக மாறிய சோகம்.!! விமான விபத்தில் குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்..!!

தன்னுடைய சொந்த ஊருக்கு முதல் பயணமாக விமானத்தில் பறந்து வந்த குழந்தைக்கு அதுவே கடைசி பயணமாக மாறிய சம்பவம் கேரளா விமான விபத்தில் நடந்துள்ளது.கேரளாவின் கோழிக்கோடில் இருக்கும் Vellimadukunnu பகுதியை சேர்ந்தவர் Mohammad Nijaz Chembai.இவர் துபாயில் தனியார் கம்பெனி ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு Shahira Bhanu (29) என்ற மனைவியும், ஒரு வயதில், Asam Muhammad என்ற மகனும், 8 வயதில் Iahan Muhammad என்ற மகனும், 4 வயதில் Mariyam Ninth Muhammad என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் ஷார்ஷாவில் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தில் Shahira Bhanu (29) மற்றும் மூன்று குழந்தைகளும் சிக்கினர்.இதில் Shahira Bhanu காயங்களுடன் ஒரு தனியார் மருத்துவமனையிலும், மற்ற இரண்டு குழந்தைகள் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு வயது குழந்தையான Asam Muhammad பரிதாபமாக உ யிரிழந்தார்.துபாயில் பிறந்த Asam Muhammad தன்னுடைய சொந்த ஊருக்கு முதல் பயணமாக விமானத்தில் பறந்து வந்துள்ளார். ஆனால் அதுவே அவரின் கடைசி பயணமாக மாறிவிட்டது.மேலும், இவர்கள் இந்த பயணத்தை அடுத்த மாதம் முடிவு செய்திருந்துள்ளனர். ஆனால் இந்த கொரோனா காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்பதால், இவர்கள் முதலில் அதற்காக புறப்பட்டு வந்துள்ளனர்.இந்தச் செய்தியை கேட்டவுடன் Mohammad Nijaz Chembai நிலைகுலைந்து காணப்படுவதாகவும், உடனடியாக கேரளாவிற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் இவர் இறங்கியுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.