மூன்று வயதுச் சிறுமியின் தொண்டைக்குள் சிக்கிய மர்மம்.!! மின்னல் வேகத்தில் செயற்பட்ட மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

யாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி திடீரென்று நாணயத்தை விழுங்கிவிட்டதால், அதிர்ச்சியூட்டும் எக்ஸ் ரே புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.சீனாவின் Guangxi மாகாணத்தில் இருக்கும், பாரம்பரிய சீன மருத்துவத்துமனையான நானிங் மருத்துவமனைக்கு பீ பீ என்று அறியப்படும் மூன்று வயது சிறுமி அழைத்து வரப்பட்டுள்ளார்.அப்போது அவரது தொண்டையில் இருந்து ஒரு யுவான் மதிப்பு கொண்ட நாணயம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வெள்ளிக் கிழமை பாட்டியுடன் வீட்டில் இருந்த மூன்று வயது சிறுமி, திடீரென்று மேசையின் மீது இருந்த நாணயத்தை விழுங்கியுள்ளார்.இதனால், சிறுமியின் தாத்தா உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர். சுமார் 25 மில்லிமீற்ற கொண்ட ஒரு யுவான் நாணயத்தை அவர்கள் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.அதன் பின் சிறுமியின் நிலைமை மோசமடைய, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்து, எக்ஸ் ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் தொண்டையில் நாணயம் இருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நாணயம் வெளியே எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை நல்ல நிலையில் இருப்பதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.மேலும், குழந்தைகளுக்கு பொதுவாகவே சிறிய பொருட்கள் போன்றவற்றை சற்று விலகிய தூரம் இருக்கும் வரை வைத்து கொள்வதே நல்லது, இல்லையேனில் ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.