கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின் மிக குறைந்த கொரோனா இறப்பு விகிதத்தை பதிவு செய்த ரஷ்யா…!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏப்ரல் மாத பிற்பகுதிக்கு பிறகு குறைந்த அளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 945பேர் பாதிப்படைந்ததோடு, 130பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.இதுவே ஏப்ரல் 23ஆம் திகதிக்கு (4,774பேர்) பிறகு பதிவான பிறகு குறைந்த அளவிலான கொவிட்-19 பாதிப்பு ஆகும்.கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 559பேர் பாதிப்படைந்துள்ளனர்.மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 131ஆக உள்ளது.மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 79ஆயிரத்து 293பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் ஏழு இலட்சத்து மூவாயிரத்து 175பேர் பூரண குணமடைந்துள்ளனர்.