முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள 7 நபர்கள்..!!

முதல்முறையாக இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு பேர் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி, கலாநிதி நாலக கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால், விசேட மருத்துவ நிபுணர் சீதா அரம்பேபொல, பேராசிரியர் சன்ன ஜயசுமன, சஷீந்திர ராஜபக்ச மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரே குறித்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.இந்த நிலையில் அவர்கள் ஏழு பேரும் இன்று அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.மொத்தமாக 26 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.