பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த 40 மில்லியன் ரூபா..!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 275 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

நேற்று (11) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் கஞ்சாப்பொதிகளை மீட்டனர்.மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 40 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கஞ்சா கடத்தலின் சூத்திரதாரியையும், கடத்தலிற்கு பயன்பட்ட படகையும் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.