முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்காக இலங்கையில் உருவாக்கப்படும் புதிய பதவி..? விரைவில் இடம்பெறப் போகும் மாற்றம்..!!

பிரதி பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க தயாராக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் தென்னிலங்கையிலிருந்து வெளியான தகவல்களின்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்று கொண்டதுடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சு பதவியும் வழங்கப்படவில்லை.எனினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தின் போது பிரதி பிரதமர் பதவி ஒன்றை உருவாக்கி, அதனை மைத்திரிக்கு வழங்க உள்ளதாக நம்பிக்கையான அரச தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி என்பதால், அவருக்கு அமைச்சு பதவியை விட உயர்வான பதவியை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.