கொரோனா அச்சத்தினால் தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி..!!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் இருந்த மூன்று கர்ப்பிணிப் பெண்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று(புதன்கிழமை) குறித்த மூவரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 256 பேர், ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.இந்நிலையில், அவர்களில் மூன்று கர்ப்பிணிப் பெண்கள், மகப்பேற்று காலம் நெருங்கிய காரணத்தால், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.