யாழில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி..!!

யாழ். கொரோனா பரிசோதனை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். கொரோனா ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-11) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்த கொரோனா பரிசோதனையிலேயே இவ்வாறு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். கொரோனா ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் குறித்து அறிவிக்கும் நாளாந்த அறிக்கையிலேயே யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் நேற்றைய தினம் யாழ். கொரோனா ஆய்வுகூடத்தில் 100 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதில் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பெற்றப்பட்ட மாதிரிகளில் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பரிசோனைக்குள்ளாக்கப்பட்ட 100 பேரின் விபரங்கள்…

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள்…– 2 பேர்,தனிமைப்படுத்தல் மையம் விடத்தற்பளை – 9 பேர் (ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி)

பொது வைத்தியசாலை மன்னார் – 4 பேர்,நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 30 பேர்,ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 5 பேர்,பிரதேச வைத்தியசாலை கோப்பாய் – 5 பேர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 20 பேர்,யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 24 பேர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.