தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..!

அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட சிம் அட்டைகளையே தகவல் தொடர்புகளுக்காக பயன்படுத்துமாறு தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷாதா சேனாநாயக்க இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது, நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும் பதிவுசெய்யப்படாமல் பயன்பாட்டிலுள்ள சிம் அட்டைகளை, தகவல் தொடர்பு வலையமைப்புடன் இணைப்பதை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விரைவில் நிறுத்தவுள்ளது.அத்துடன், அவர்களின் இணைப்பை எதிர்காலத்தில் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் இதன்போது கூறியுள்ளார்.