சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இலங்கைத் தேசியக் கொடி மீண்டும் பூமிக்கு..!!

இலங்கை இளைஞர்களினால் தயாரிக்கப்பட்ட ராவணா 1 செயற்கைக்கோள் அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.அந்த செயற்கைக்கோளை விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் கடந்த வாரம் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த ராவணா 1 செயற்கைக்கோளில் இலங்கையின் தேசிய கொடி ஒன்றும் வைத்து அனுப்பப்பட்டிருந்து.அந்த செயற்கைக்கோள் பூமிக்கு வந்த பின்னர் அதனை உருவாக்கிய தரிது தயாரத்ன அந்த தேசியக் கொடியை கையில் ஏந்தி பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றும் பதிவிட்டுள்ளார்.