இலங்கையின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு..!! (நேரலை)-முழுமையான விபரங்கள் உள்ளே..)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர்.கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு வைபவம் இடம்பெற்று வருகின்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறுகின்றது.இதில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு பதவிகள், மாவட்ட ரீதியான தலைவர்கள், இணைத்தலைவர்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன.

அமைச்சரவை அமைச்சர்கள் நியமனங்கள்

பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ
நிதி புத்தசாசன மற்றும் சமய அலுவலகல் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ
நிமல் சிறிபால டி சில்வா – தொழில் அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சர்
பவித்ராதேவி வன்னிஆராச்சி – சுகாதார துறை அமைச்சர்
தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்துறை அமைச்சர்
காமினி லொக்குகே – போக்குவரத்து துறை அமைச்சர்

பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சர்

சீ.பி.ரத்நாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்

ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

கெஹேலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகத்துறை அமைச்சர்

சமல் ராஜபக்ஷ – நீர்பாசன துறை அமைச்சர்

டலஸ் அழகப்பெரும – மின்சக்தித் துறை அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்

விமல் வீரவன்ச – கைத்தொழில் துறை அமைச்சர்

மஹிந்த அமரவீர – சுற்றுலாடல் துறை அமைச்சர்

எஸ்.எம்.சந்திரசேன – காணி அமைச்சர்

மஹிந்தானந்த அலுத்கமகே – கமத்தொழில் துறை அமைச்சர்

வாசுதேவ நாணயக்கார – நீர் வளங்கள் துறை அமைச்சர்

உதய பிரபாத் கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சர்

ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத் துறை அமைச்சர்

ரோஹித அபேகுணவர்தன – துறைமுககங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

அலி சப்ரி – நீதி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரம்:

சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
பியங்கர ஜயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்
துமிந்த திஸாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் மின் உற்பத்தி கருத்து திட்டம்
தயாசிறி ஜயசேகர – பத்திக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
லசந்த அழகியவன்ன – கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு
சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே – சிறைச்சாலை மறுசீரமை மற்றும் சிறை கைதிகள் புனர்வாழ்வு
அருந்திக்க பெர்னாண்டோ – தென்னை கித்துல், பனை, இறப்பர் மேன்மை செயற்பாடு, அது தொடர்பான உற்பத்தி செயற்பாடு மற்றும் இறக்குமதி
நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
ஜயந்த சமரவீர – கொள்கலன் முனையங்கள், துறைமுக வள வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில்
ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி காணி மற்றும் சொத்து அபிவிருத்தி
கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர் திருத்துதல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச் செய்கைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதி
விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள்
ஜானக வக்கும்புர – கறும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடு
விஜித வேறுகொட – அறநெறி பாடசாலை, பிரிவெனாக்கள், பிக்குமார் கற்றை – பிக்குமார் பல்கலைக்கழகம்
ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி வதிவிட பொருளாதாரம் நுண்நிதி, சுய தொழில்
மொஹான் டி சில்வா – உரம் உற்பத்தி மற்றும் வளங்கள்
லொஹான் ரத்வத்தை – இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள்
திலும் அமுனுகம – வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில்
விமலவீர திஸாநாயக்க – வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி, மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கை
தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்
இந்திக்க அனுருந்த – கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டட பொருட்கள்

சிறிபால கமலத் – மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் மறுசீரமைப்பு உட்கட்டமைப்பு

சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

அனுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்பாசனம்

சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகங்கள் அபிவிருத்தி

தேனுக விதானகமகே – கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு

சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சமூக சுகாதாரம்

பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்ப பாடசாலை அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள்

பிரசன்ன ரணவீர – பிரம்புகள், பித்தலை, மட்பாண்டங்கள் மற்றும் மர பொருட்கள், கிராமிய பொருட்கள் மேம்பாடு

டீ.வீ.சானக – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி

டீ.பீ.ஹேரத் – கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்

சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள் சேதன உணவுகள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் மிளகாய், வெங்காய உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்

நாலக கொடஹேவா – நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு மற்றும் சமூதாய தூய்மைப்படுத்தல்

ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்.

அஜித் நிவாட் கப்ரால் – நிதி மூலதன சந்தை, அரச, விவசாய சீர்திருத்தம்

சீதா அருதேபொல – திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, தகவல் தொழில்நுட்பம்

சன்ன ஜயசுமன – ஔடத உற்பத்திகள் வளங்கள் மற்றும் ஒழுங்குறுத்தல்

மாவட்ட ரீதியான அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனம் ஜனாதிபியினால் வழங்கி வைப்பு:

கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க
காலி – சம்பத் அத்துகோரள
மாத்தறை – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி
யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா
வவுனியா – கே. திலீபன்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்
அம்பாறை – டி. வீரசிங்க
திருகோணமலை – கபில அத்துகோரள
குருநாகல் – குணபால ரத்னசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அனுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க

Live Streaming

නව කැබිනට් මණ්ඩලය දිවුරුම් දීම – සජීව විකාශයபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு…#ITN #ITNnews #ITNSriLanka #Vasantham #ITNDigital

Posted by ITN Sri Lanka on Tuesday, August 11, 2020