ஊரங்குச் சட்டம் தளர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்த பகுதிகளில் நீக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அன்றையதினம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது. எனினும் தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தும் நடவடிக்கை மக்களின் நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு சட்டத்தினால் ஏற்படும் சிரமங்களை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்கள் கொள்வனவு செய்யும் போது மிகவும் அவசியமான பொருட்களை மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டின் போது சம்பிரதாயங்கள் மற்றும் நபர்களுடனான தொடர்புகளை குடும்பத்தினருடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.