யாழ்ப்பாணத்தின் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி மரணம்..!!

தென்மராட்சி – மந்துவில் பகுதியில் 106 வயது வரை ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் (09) இரவு மரணமடைந்துள்ளார்.

மந்துவில் கிழக்கு கொடிகாமப் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி வள்ளி என்ற குறித்த மூதாட்டி 80 வயதுவரை கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.மூதாட்டியின் கணவர் 1998ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு பேரப்பிள்ளைகளும் மூன்று பூட்டப்பிள்ளைகளும் இருக்கின்றனர்.