நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,622 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள 2871 பேரில் 238 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இதேவேளை 49 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.