கட்டுப்பாட்டையிழந்து உழவு இயந்திரம் கோர விபத்து…பரிதாபமாகப் பலியான எட்டு வயதுச் சிறுமி..!!

அக்கரைபற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆளங்குளம் வீதியில் இடம்பெற்ற உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (10) மாலை 5.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.உழவு இயந்திரம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் உழவு இயந்திர ஓட்டுனர் மற்றும் அதில் பயணித்த சிறுமிகள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் அக்கரைபற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.