சற்று முன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ..!!

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சற்று முன்னர் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க களனி ரஜமஹா விகாரையில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 13ஆவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் பதவியேற்றிருந்தார்.இந்த நிலையிலேயே, இன்றைய தினம் அவர் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.மேலும், குருணாகல் மாவட்டத்திலிருந்து இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 முன்னுரிமை வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.