யாழின் பல்வேறு பிரதேசங்களில் கொள்ளையடித்து சுடலையில் பதுங்கியிருந்த திருடர்கள் அதிரடியாகக் கைது..!!

வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூவர்இ சுடலைக்குள் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதிகளில் செல்லும் பெண்களின் தங்க நகைகளை அபகரிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்களே சிக்கினர்.மல்லாகம் பகுதியிலுள்ள சுடலையொன்றிலேயே அவர்கள் பதுங்கியிருந்தனர்.முதலில் ஒரு திருடன் சிக்கினார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் இருவர் சிக்கினார்.அண்மையில் பலாலி பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்து சென்றனர். இது தொடர்பாக பலாலி பொலிசாரிடம் முறையிடப்பட்டது. விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்களின் அடையாளம் தெரிய வந்தது.கட்டுவனை சேர்ந்த ஒருவரை தேடி வந்த பொலிசார், அவர் மல்லாகம் சுடலையில் மறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் 2 தங்கப்பவுண் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அளவெட்டியை சேர்ந்த ஒருவர் கைதானார்.

அவர்களிடம் தங்கநகைகளை வாங்கி உருக்கி விற்பனை செய்யும் மயிலணியை சேர்ந்த ஒருவரும் கைதானார்.இவர்கள் வளலாய், அச்சுவேலி, கட்டுவன் பகுதிகளில் இடம்பெற்ற 5 வழிப்பறிக் கொள்ளைகளில் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.