புதிய அமைச்சரவை–அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள அரசாங்கம்…!

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அமைச்சரவையில் இம்முறை 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் விடயதானங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய பாராளுமன்றம் இம்மாதம்12 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.