கணவனுக்கு தெரியாமலே சொந்த வீட்டில் விபச்சார விடுதி நடத்திய பாசக்கார மனைவி..!! விசாரணையில் அதிர்ந்து போன பொலிஸார்..!!

நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்த கணவனுக்கு அதிர்சி மேல் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இப்படியும் நடக்குமா என்று சினிமாவை மிஞ்சிய ஷங்கர் படக் கதை போல இருக்கு இது… வாருங்கள் பார்க்கலாம். சென்னை, செங்குன்றம், பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். ராஜேஷின் 2-வது மனைவி ராதா. ஒரு மகன், மகள், ராதாவின் தங்கை ஆகியோர் கூட்டுக்குடும்பமாக இந்த வீட்டில் குடியிருந்துவருகின்றனர். கடந்த 5-ம் திகதி அனைவரும் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ராஜேஷின் வீட்டுக்கு பைக்கில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் திடீரென உள்ளே வந்து நகைகளை, 3 செல்போன்களை திடிரு தப்பிச் சென்றுவிட்டார்கள்.பட்டப்பகலில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ராஜேஷ், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ராஜேஷ் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற செல்போன் சிக்னல்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

 

அப்போது செல்போன் சிக்னல் மீஞ்சூர் பகுதியைக் காட்டியது. சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் பைக் நம்பர்கள் மற்றும் அவர்கள் தண்டையார்பேட்டை வரை பைக்கில் சென்றதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு (32) என்பவரின் தலைமையில் இந்தக் கொள்ளை கும்பல் வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ரகுவிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,

“இந்தக் கொள்ளை சம்பவத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகுவின் கும்பல் ஈடுபட்டதாக தாம் கண்டு பிடித்து அவரை விசாரித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, எம்.கே.பி நகரைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரகுவுக்கு ராஜேஷின் மனைவி ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராதா அந்தப் பகுதியில் வறுமையில் வாடும் பெண்களை ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதற்காக ராதாவின் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு அறை உள்ளதாம்.இது கணவருக்கு கூட தெரியாது. கடந்த வாரம் ராதாவின் வீட்டுக்கு வந்த ரகு, அங்கிருந்த ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். அதன் பின்னர் அவர் ராதாவின் வீட்டை பார்த்துவிட்டு இங்கே நகைகள் இருக்கும் என்று தெரிந்து. தனது கும்பலை கூட்டி வந்து கொள்ளையடித்துள்ளார். இந்தக் கொள்ளையில் ஏழரை சவரன் எடையுள்ள தங்க நகைகள், குழந்தையின் வெள்ளிக் கொடி, 50 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசு, 9,000 ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அவற்றையும் கொள்ளையடிக்கப் பயன்படுத்தி பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கைதானவர்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறார்கள் பொலிசார்.ஆனால், கணவன் தான் இன்னும் அதிர்சியில் இருந்து மீளவில்லையாம்.