கடந்த 100 நாட்களாக கொரோனாவின் சுவடே இல்லாமல் கடந்துவந்த உலகின் ஒரே நாடு இதுதான்..!!

கொரோனா வைரஸில் இருந்து மீண்ட ஒரே நாடாக நியூசிலாந்து நாடு கருதப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கூட இல்லை என்ற நிலை தங்கள் நாட்டில் இருப்பதாக நியூசிலாந்து அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தங்கள் நாட்டில் மூன்று நாட்களாக ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை என்று நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதற்கு அந்த நாடு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி லேசாக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதால் இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட கடந்த 100 நாட்களில் நியூசிலாந்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து நாட்டைப் பின்பற்றி அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்றே கூறப்படுகிறது