ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்..!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இதனை அறிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அகிலவிராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார்.இதன்படி, புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்த்தன, தயா கமகே, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.