எச்சரிக்கையை மீறி ரயில் கடவையில் சென்ற கார் ரயிலுடன் மோதி கோர விபத்து… ஸ்தலத்தில் பலியான சாரதி..!!

ரயில் வருவதை அறிந்து எச்சரிக்கப்பட்டபோதும் எச்சரிக்கையை மீறி ரயில் கடவையை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வெலிகம பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. பிலியந்தலையில் இருந்து மருதானை நோக்கி சென்ற ரயிலே கார் மீது மோதியுள்ளது. ரயில் வருவதை காரின் சாரதி அறிந்திருந்ததாகவும், ரயில் கடவை சமிக்ஞை விளக்குகள் ஒளிர்ந்து எச்சரிக்கப்பட்டபோதும் வேகமாக கடவையை கடக்க முயன்றபோது விபத்து இடம்பெற்றிருக்கின்றது.சம்பவத்தில் கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.