பலருக்கும் தெரிந்திராத இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மலைக்க வைக்கும் சம்பளம் மற்றும் இதர மேலதிக கொடுப்பனவு விபரங்கள்..!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் – வரப்பிரசாதங்கள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் – ரூபா 54285/= , பிரதி அமைச்சர் – ரூபா 63500/= ,இராஜாங்க / அமைச்சரவை அமைச்சர் – ரூபா 65000/= சபாநாயகரின் சம்பளம் – ரூபா 68,500/, பிரதமர் – ரூபா 71500/சம்பளத்திற்கு மேலதிகமாக

அலுவலக கொடுப்பனவு – ரூபா 100,000/= (ஒரு இலட்சம்)
போக்குவரத்து கொடுப்பனவு – ரூபா 10,000/=
தொலைபேசி கொடுப்பனவு – ரூபா 50000/= (அலுவலகம்)
மொபைல் தொலைபேசி கொடுப்பனவு – ரூபா 50000/=
இலவச அஞ்சல் கொடுப்பனவு ரூபா 350,000/= (மூன்றரை இலட்சம்)
டிரைவர் மற்றும் விருந்தோம்பல் கொடுப்பனவு ரூபா 45,000/=

பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூபா 2500/= , ஒரு மாதத்தில் குறைந்தது 8 நாட்களுக்கு அமர்வு நடைபெறுகிறது, அதன்படி மாதத்திற்கு ரூபா 20,000/= பெறப்படுகிறது.கூட்டமில்லாத நாட்களில் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு ரூபா 2500/= (மாதாந்தம் 5 குழு நாட்கள் , அதன்படி மாதாந்தம் ரூபா 12,500/=)

ஒருங்கிணைப்பு செயலாளருக்கு 218 லிட்டர் எரிபொருளுக்கு ரூபா 17440/=
இராஜாங்க/ அமைச்சரவை அமைச்சு ஊழியர்களுக்கு 05 வாகனங்கள்,
பிரதி அமைச்சு ஊழியர்களுக்கு 03 வாகனங்கள்,குறிப்பாக, ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் தனியார் செயலாளர் பதவிகளுக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் நியமிப்பது அனுமதிக்கப்படுகிறது. அந்தப் பதவிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவு என்பன மேலதிகமாக வழங்கப்படுகின்றனகூடுதலாக, சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு கட்டணமில்லா உரிமங்கள் கிடைக்கின்றன. ரூபா 30-40 லட்சத்திற்கு வாங்கிய வாகனங்களை ரூபா 25 மில்லியனுக்கு விற்கலாம்.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்படும்போது ரூபா 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் காப்பீட்டுத் தொகை ரூபா 20 லட்சம்.கூடுதலாக, ஒரு ஆடம்பர உத்தியோகபூர்வ வீடுகாலை உணவு மற்றும் மதிய விஷேட உணவிற்கு பாராளுமன்றம் ரூபா 150/= மாத்திரமே அறவிடுகிறது.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் குழந்தைகளுக்கு அனுமதி,V.I.P வெளிநாட்டு பயணம், உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கான சிறப்பு விஷேட சலுகைகள்,இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பேரும் பொதுமக்களின் வரிப் பணத்தால் 05 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறார்கள். இப்படி அள்ளிக் கொடுத்தால் எவருக்குத் தான் பதவி ஆசை வராது..?

நன்றி : (தகவல் – லங்காதீப)