மிக நீண்ட கொரோனா விடுமுறையின் பின் இன்று மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்..!!

வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் இன்றைய தினம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன் போது மாண்வர்களுக்கு உடல் வெப்பநிலை அளவிடப்பட்டுள்ளதுடன்,மாணவர்கள் அனைவரும் கைகளை கழுவும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

200 மாணவர்களுக்குக் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமை போன்று ஐந்து நாட்களும் நடைபெறும். 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.தரம் ஐந்து மாணவர்கள் ஐந்து தினங்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வியமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.