பச்சிளம் குழந்தையைக் கொலை செய்து காட்டில் வீசிய 27 வயது தாய்..! இலங்கையில் நடந்த பதைபதைக்க வைக்கும் கொடூரம்..!!

பண்டாரவெல- மஹாகந்த பகுதியில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்து காட்டில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 27 வயதான தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இக்குழந்தை மீட்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.