வீதியில் நடந்து சென்ற 8 மாணவர்கள் மீது வேகமாக மோதித் தள்ளிய வாகனம்..!! ஒருவர் ஸ்தலத்தில் பலி..மேலும் ஏழு மாணவர்களின் கதி.!!

தெஹியத்தகண்டி-அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ள நிலையில் மேலும் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக வகுப்புக்குச் சென்ற குறித்த மாணவர்கள் மீது கெப்ரக வாகனம் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.