தேர்தல் தோல்வியின் எதிரொலி…கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்ய நாளை கூடுகின்றது செயற்குழு..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான விசேட செயற்குழுக்கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
width=”2277″]

2020 பொதுத்தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக முன்னதாக செய்தி வெளியாகியது.இதனடிப்படையில் செயற்குழுக்கூட்டத்தில் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.எனினும் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் விடயத்தில் மேற்கூறிய நான்கு பேரில் எவர் தொடர்பிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெளிவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.