வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் மாயம்..!! பட்டப்பகலில் வவுனியாவில் பயங்கரம்..!

வவுனியா கற்குளிப் பகுதியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா கற்குளி பகுதியில் நேற்கு மாலை வீடொன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (BOXER MODAL NPHI-6704) மோட்டார் சைக்கிளை இனம் தெரியாதநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.வீடொன்றின் முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியே இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.இதனையடுத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் சம்பவம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.திருட்டு தொடர்பாக வவுனியா பொலிசார் கற்குளி பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.