யானையினால் அதிகாலையில் தடம்புரண்ட யாழிலிருந்து சென்ற புகையிரதம்..!! அதிஸ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தொடரூந்துடன் மோதி யானை ஒன்று மரணமடைந்துள்ளதுடன், தொடரூந்தும் தடம்புரண்டுள்ளது. குறித்த சம்பவம் கனகராயன்குளம் ஆலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்;

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பாதையில் நின்றிருந்த யானையுடன் மோதிவிபத்திற்குள்ளாகியது. விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், தொடரூந்து பாதையைவிட்டு விலகி தடம்புரண்டது. எனினும் அதிஸ்டவசமாக பயணிகளிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயனகுளம் பொலிசார் மற்றும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.இதேவேளை தொடரூந்து பயணிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.