பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதி…!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முன்னோக்கி பயணிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.களனி ரஜமகா விகாரையில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றிருந்தார்.இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும்,

மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.இலங்கையர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை எனது தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய என்னைத் தூண்டுகிறது.அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முன்னோக்கி பயணிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.