யாழ். தேர்தல் களத்தில் தனது தாயாருக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு கலங்கி நிற்கும் ரவிராஜின் புதல்வி..! (இணையத்தில் வைரலாகும் காணொளி)

எனது தந்தை அரசியலில் இருந்து மக்களின் அன்பைத் தவிர பணம் எதையும் சம்பாதிக்கவில்லை. அதே போல எனது அம்மா சசிகலா ரவிராஜூம் தேர்தலில் போட்டியிட்டு இவ்வளவு தூரம் வந்து மக்களின் அன்பைப் பெற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மகள் பிரவினா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.அவர் தனது முகநூல் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனது தாயார் தனியாளாக நின்று பிரச்சாரங்களை மேற்கொண்டு பாடுபட்ட நிலையில் இறுதிநேரம் இவ்வாறு குளறுபடிகள் நடந்தமை மிகுந்த கவலையளிக்கின்றது.வெற்றி தோல்வி என்பது குறித்து எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் அந்த தோல்வி எந்த சந்தர்ப்பத்தில் கிடைத்தது.. அதன் மூலம் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் எங்களுக்கு அதிக வருத்தத்தை கொடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;