கடன் சுமையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பப் பெண்.!! யாழ்.ஊரெழுவில் சோகம்..!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.ஊரெழுவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சுரேந்திரதாசன் மேரி மரியரீட்டா என்ற பெண்ணே உயிரை மாய்த்தார்.

கடந்த 23ஆம் திகதி அவர் உயிரை மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.கடன் தொல்லை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.