பொதுத் தேர்தல் வெற்றியுடன் மனைவி சகிதம் கதிர்காமத்தில் வழிபாடு செய்த நாமல் ராஜபக்ஸ..!!

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் கதிர்காமம் முருகன் ஆலயம் மற்றும் கிரிவேஹர விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கிரிவேஹர விகாரையில் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர்.அவர் தனது மனைவியுடன் நேற்று இந்த வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட புகைப்படங்களை நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ச விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 660 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். நாமல் ராஜபக்சவின் பெரியப்பாவான சமல் ராஜபக்ச 85 ஆயிரத்து 330 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பெற்றார்.