மஹிந்த அரசாங்கத்தில் இணையப் போகும் முக்கிய தமிழ் அரசியல் வாதி..? திரைமறைவில் பேச்சுக்கள் ஆரம்பம்..!

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ஏனைய கட்சிகளை சேர்ந்த சிலர், புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பல வருடங்களுக்கு எதிரணியாக இருப்பதால், எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த அரசியல்வாதி விரைவில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.